உள்ளடக்கத்துக்குச் செல்

நாகப்பட்டினம் இடைத்தேர்தல், 1979

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகப்பட்டினம் இடைத்தேர்தல், 1979

← 1977 17 சூன் 1979 1980 →
 
வேட்பாளர் கே. முருகையன் எம். மகாலிங்கம்
கட்சி கம்யூனிஸ்டு கட்சி அஇஅதிமுக


நாகப்பட்டினம் இடைத்தேர்தல், 1979 (1979 Nagapattinam by-election) என்பது 17 சூன் 1979 அன்று நாகப்பட்டினம் மக்களவை (இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபை) நடைபெற்ற இடைத்தேர்தல் ஆகும்.[1][2][3] இத்தேர்தல் 1979ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தில் கொல்லப்பட்ட மூன்று முக்கிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களில் ஒருவரான சி. கோ. முருகையன் அப்போதைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரணத்தினால் நடத்தப்பட்டது.[3][4] நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டது.[5]

1979 வாக்கில் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து இந்தியப் பொதுவுடைமை கட்சி விலகியிருந்தது.[3] இந்திய பொதுவுடைமை கட்சி வேட்பாளர் கே.முருகையனுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆதரவு தெரிவித்துள்ளன.[3] கொத்தடிமைத் தொழிலாளியான பொதுவுடைமைக் கட்சி வேட்பாளருக்கு அத்தொகுதியில் உள்ள தலித் சமூகங்களிலிருந்து பெரும் ஆதரவு இருந்தது.[3][6]

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் மு. மகாலிங்கத்திற்குக் காங்கிரசு (ஐ) ஆதரவு தெரிவித்தது.[3] நாகப்பட்டினம் இடைத்தேர்தலுடன் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது.[7] தஞ்சாவூரில் காங்கிரசு (இந்திரா) வேட்பாளரை அதிமுக ஆதரித்தது. அதிமுக மேலிடப் பொறுப்பாளர் எம். ஜி. இராமச்சந்திரன் தேர்தல் பிரச்சாரத்தின் போது இரு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் [7] காங்கிரஸ் (இந்திரா) தலைவர் இந்திரா காந்தி தஞ்சாவூரில் மட்டுமே பிரச்சாரம் செய்தார்.[7]

முடிவுகள்

[தொகு]
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
கே. முருகையன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 288,000 51.12
மு. மகாலிங்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 272,059 48.29
ஏ. பி. செல்வம் சுயேச்சை 2,200 0.39
வி. எம். இம்மானுவேல் ராமராஜ் சுயேச்சை 1,141 0.20

ஆதாரங்கள்: [8]

பின்விளைவு

[தொகு]

இந்த இடைத்தேர்தல் வெற்றியினை இடதுசாரி மற்றும் மக்களாட்சி சக்திகளுக்குக் கிடைத்த வெற்றி என்று பொதுவுடைமைக் கட்சி கொண்டாடியது.[9] இருப்பினும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் மிகவும் எச்சரிக்கையான தொனியை எடுத்துக் கொண்டார். இடைத்தேர்தல் முடிவுகள் "தமிழகத்தில் எதேச்சதிகார சக்திகள் இன்னும் வலுவாக இருப்பதைக் காட்டுகிறது" என்று கூறினார்.[9] நாகப்பட்டினத்தில் எம். ஜி. இராமச்சந்திரன் கட்சி வேட்பாளரை போதுமான அளவு ஆதரிக்கவில்லை என்று பிரதேச காங்கிரசு குழு (இந்திரா) தலைவர் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டார்.[9]

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 1980 மக்களவை பொதுத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் திமுக வேட்பாளர் தஞ்சை மு. கருணாநிதியிடம் கே.முருகையன் தோல்வியடைந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Indian and Foreign Review.
  2. The Indian Journal of Political Studies.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Rural change in southeast India: 1950s to 1980s.
  4. Asian Almanac.
  5. 5.0 5.1 Review of 1980 mid-term Lok Sabha elections and resolutions adopted by the National Council of the Communist Party of India, New Delhi, 30 January to 3 February 1980.
  6. Narendra Subramanian. Ethnicity and Populist Mobilization: Political Parties, Citizens, and Democracy in South India. Oxford University Press. p. 172.
  7. 7.0 7.1 7.2 MGR, the man and the myth.
  8. Election Commission of India. Bye-election results 1952–95
  9. 9.0 9.1 9.2 Economic and Political Weekly. Sameeksha Trust. 1979. p. 1076.